கூடுகிறது தமிழ் கூட்டமைப்பு

அரசியல் யாப்பு மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் சனிக் கிழமை இடம்பெற்றவுள்ளது.

கலந்துரையாடல் சனிக் கிழமை காலை 10 மணிக்கு வவுனியா வன்னி இன் விடுதியில் இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிர் சாள்ஸ் நிர்மலநாதன் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்தார்.

கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் கூறினார்.

ஸ்ரீலங்காவிற்கு வருகைதரும் வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரின் சந்திப்புக்கள் தொடர்பாகவும், கடந்தகாலத்தில் முன்னெடுக்கப்பட்ட செயல்திட்டங்கள், எதிர்காலத்தில் முன்னெடுக்கப் படவேண்டிய செயற்திட்டங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.