புங்குடுதீவில் 5 பேர் ஒரேயடியாகத் துாக்கு காவடியில் தொங்கிய காட்சி

யாழ் புங்குடுதீவு காளிகோவில் திருவிழாவின் இன்றய தேர்த் திருவிழாவில் 5 பக்தர்கள் ஒன்றாக தூக்குக் காவடி எடுத்து தமது நேர்த்திக் கடனை செலுத்தியுள்ளனர்.

ஒருவிதத்தில் இது ஒரு சாதனையாகவும் அமைந்திருந்தது. ஏனெனில் இதுவரை இவ்வளவு பேர் ஒன்றாக தூக்குக் காவடி எடுத்ததில்லை. இன் நிகழ்வை பல்லாயிரக்கணக்கானோர் பரவசத்துடன் பார்வையிட்டுச் சென்றமையை காணக்கூடியதாக இருந்தது.