சிறுவர் ஊழியத்திற்கு எதிரான உலக தினம் ஜனாதிபதி தலைமையில் இன்று அனுஷ்டிப்பு!

சிறுவர் ஊழியத்திற்கு எதிரான சர்வதேச தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று அனுஷ்டிக்கப்பட உள்ளது.

இன்று முற்பகல் 10 மணியளவில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது. சிறுவர் ஊழியத்திற்கு எதிரான சர்வதேச தினம் கடந்த 12ஆம் திகதி உலகம் முழுவதிலும் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த தினத்தையொட்டி இலங்கையில் இன்று விசேட வைபவம் நடைபெறவுள்ளது. “உற்பத்தி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி சிறுவர் ஊழியத்தை இல்லாதொழிப்போம்” என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

14 வயதுக்கும் குறைந்த சிறுவர், சிறுமியர் எந்தவொரு தொழில்களிலும் ஈடுபடுத்தப்படக் கூடாது எனவும், 14 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களின் சுகாதாரத்தை, பாதுகாப்பை பாதிக்கும் தொழில்களில் ஈடுபடுத்தக் கூடாது எனவும் இம்முறை தொனிப்பொருளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒட்டு மொத்த இலங்கையையும் உள்ளடக்கும் வகையில் சிறுவர் ஊழியத்தை ஒழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் முதற் பிரஜையான ஜனாதிபதி கையொழுத்து

சிறுவர் தொழிலாளர்களை இல்லாது செய்யும் நடவடிக்கைக்காக முதல் கையெழுத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இட்டுள்ளார்.

சிறுவர் தொழிலாளர்களை இலங்கையில் இருந்து முற்றாக அகற்றுவதற்காக உறுதிமொழி பத்திரத்தில், இலங்கையின் முதல் பிரஜையான ஜனாதிபதி இன்று கையெழுத்திட்டுள்ளார்.

2010ஆம் ஆண்டு நெதர்லாந்து நாட்டில் முதன்முதலில் ஹேக் நகரில் கையெழுத்திடப்பட்ட உறுதிமொழிக்கு அமைய 2016ஆம் ஆண்டின் இறுதியில் ஆபத்தான தொழில்களில் சிறுவர்களை ஈடுபடுத்தும் நடவடிக்கையானது 100 வீதம் பூரணபடுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாதம் 12ஆம் திகதி சர்வதேச சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தினம் அனுஸ்டிக்கப்பட்டதுடன், வறுமை அதிகரிக்கும் போது சிறுவர் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டமை

சுட்டிக்காட்டத்தக்கது.