என்னினமே என் சனமே!! என்னை உமக்குத் தெரிகின்றதா?

ஆசிரியராக இருக்கும் தனது மகனை சந்திப்பதற்காக பல கிலோமீற்றர் துாரம் நடந்து செல்கின்றார் இந்தத் தந்தை. வன்னியில் முல்லைத்தீவு விசுவமடுப் பிரதேசத்தில் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்தவர் தாகம் காரணமாக தவித்த போது அவருக்கு நீர் கொடுத்து ஆறுதல்படுத்திய பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.

ஆசிரியராக உள்ள தனது மகனைச் சந்திப்பதற்காக செல்வதாக குறித்த வயதானவர் எமக்குத் தெரிவித்தார். இறுதி யுத்தம் பற்றிய இவரது நினைவுகளும் தமக்கு யுத்தத்தால் ஏற்பட்ட துயரங்களையும் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார்.

இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் இவ்வாறான எத்தனையோ முதியவர்கள் தற்போது தங்கள் முதுமைக் காலத்தில் துன்பநிலைக்கு உள்ளாகியுள்ளமை தொடர்பாக அரசியல்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஏதாவது முன்னேற்றகரமான நடவடிக்கை எடுத்துள்ளார்களா? என்பது கேள்விக்குறியே!