தென்கொரியாவை சென்றடைந்தார் பிரதமர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் சற்றுமுன்னர் தென் கொரியாவை சென்றடைந்துள்ளார்.

தென் கொரியாவில் இடம்பெறவுள்ள 107ஆவது சர்வதேச றோட்டறி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு சென்றுள்ளார்.

தென்கொரியாவின் சோல் நகரிலுள்ள இன்சோன் (Incheon) விமான நிலையத்தை பிரதமர் உள்ளிட்ட குழுவினர் சற்று முன்னர் வந்தடைந்ததாக அங்கிருக்கும் எமது விஷேட செய்தியாளர் ஷெஹான் பரணகம கூறினார்.

தென்கொரியாவின் வெளிவிவகார பிரதியமைச்சர் சொய் ஜொங்மூன் (Choi Jongmoon) மற்றும் அங்கிருக்கும் இலங்கை தூதுவர் மனிஷா குணசேகர ஆகியோர் பிரதமரை வரவேற்றுள்ளனர்.

இன்று அதிகாலை 1.15 மணியளவில் பிரதமர் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

நாளை 29ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 01ஆம் திகதி வரை தென்கொரியாவின் சோல் நகரில் இடம்பெற உள்ள இம் மாநாட்டில் மேலும் பல நாடுகளின் அரச தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளதுடன் ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூனும் கலந்துகொள்ளவுள்ளார்.