கிளிநொச்சியிலும் கொட்டுகிறது கோடை மழை நேரில் சென்று பார்வையிட்டார் சிறீதரன்எம்.பி

கிளிநொச்சி மாவட்டத்தின் பன்னங்கண்டி, சிவபுரம், பெரியபரந்தன், பொன்நகர், உருத்திரபுரம், அக்கராயன், ஆனைவிழுந்தான், மருதநகர், உமையாள்புரம், ஆனந்தபுரம் கிழக்கு, புளியம் பொக்கணை, முரசுமோட்டை, கோரக்கன்கட்டு, நாவற்கொட்டியான், தட்டுவன்கொட்டி, யூனியன்குளம், பூநகரியின் பல கிராமங்கள் என்பன நீர் தேங்கி வாழ்விடங்களுக்குள் நீர் புகுந்துள்ளமையால் மக்கள் இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்கியுள்ளனர்.

கிளிநொச்சிக்கும் உருத்திரபுரத்திற்குமான போக்குவரத்துத் தடைப்பட்டுள்ள அதேவேளை, மன்னார் வீதியில் மண்டைக்கல்லாறு பெருக்கெடுத்துள்ளமையால் மன்னார்-பூநகரி வீதிப் போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன.

இந்நிலைமைகளை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களது உடனடித் தேவைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளார்.