லண்டனுக்கு பயணமானார் மைத்திரி.

பிரித்தானியாவில் நடைபெறும் ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று )11) முற்பகல் லண்டன் பயணமானார்.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் அவர்களின் தலைமையில் பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்குபற்றும் ஊழலுக்கெதிரான சர்வதேச மாநாடு நாளை (12) லண்டன் நகரில் ஆரம்பமாகவுள்ள அதேநேரம், ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாளைய தினம் அம்மாநாட்டில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி மாதம் மோல்டாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் அவர்கள் விடுத்த அழைப்பையேற்றே ஜனாதிபதி அவர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்கிறார்.

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் அவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவுள்ளார்.