சொந்த மண்ணை விட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் மனிதர்களின் தியாகம்

தனது குறும்படம் வாயிலாக மக்கள் அனைவரையும் பெரிதும் கவர்ந்து வருபவர் கலைஞர் பாஸ்கி மன்மதன். இவர் எடுக்கும் குறும்படத்திற்கு மக்களிடையே ஏகப்பட்ட வரவேற்பு உண்டு. ரசிகர்களும் அதிகமே.

இந்நிலையில் செல்பி என்று தற்போது இவர் எடுத்திருக்கும் குறும்படம் இணையத்தில் வெளிவந்து பலரையும் கவர்ந்துள்ளது. ஈழத்து கலைஞர்களின் கவலை, அவர்கள் பொது இடங்களில் சந்திக்கும் பிரச்சினைகள் என அனைத்தையும் தெளிவாகவே காட்டுகிறது.

இங்கு தனது தாய்நாடை விட்டு வெளிநாட்டிற்கு வேலைக்காக வந்த பின்பு தனது குடும்பம் எவ்வாறு இருக்கிறது. தனது குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அவர்கள் எவற்றையெல்லாம் இழக்க நேரிடுகிறது என்பதை உணர்த்தும் காட்சியே இதுவாகும்.