சாவகச்சேரி நகராச்சி மன்ற குப்பை மேட்டில் பாரிய தீப்பரவல்

தென்மராட்சி – சாவகச்சேரி நகராச்சி மன்ற குப்பை மேட்டில் இன்று இரவு பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

பிரதேச இளைஞர்கள் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் சிலர் இணைந்து குறித்த தீப்பரவலை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து, தீயணைப்பு படை மற்றும் அவசர காவல்துறையிருக்கு அறிவிக்கப்பட்டும் இதுவரை சம்பவ இடத்திற்கு எவரும் வரவில்லை எனவும் தகவல் கிடைத்துள்ளது.