ரூ 500 கோடி பட்ஜெட்டில் அனுஷ்கா, மீண்டும் ரீஎண்ட்ரி

அனுஷ்கா பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர். அதற்கு முன்பே வேட்டைக்காரன், அருந்ததி, சிங்கம், என்னை அறிந்தால் என தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர்.

இந்நிலையில் மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்கவுள்ளார், எப்படியும் இப்படத்தின் பட்ஜெட் ரூ 500 கோடி வரை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அப்படியிருக்க இதில் முதலில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் இருக்க, தற்போது கிடைத்த தகவல்படி இப்படத்தின் அனுஷ்காவை கமிட் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம்.