இலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்! ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி

இலங்கையில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிகளின் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் ஒன்பது இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 321 பேர் கொல்லப்பட்டனர். 500 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பில் ஐஎஸ் அமைப்பு உரிமைகோரியுள்ள நிலையில் தற்கொலை குண்டுதாரிகள் என்று சொல்லப்படும் எட்டு பேரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அமாம் செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு படத்தில் குற்றம் சாட்டப்பட்டதாக கூறப்படும் ஏழு ஆட்களுடன், தாக்குதலில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட சாஹிரா ஹசிம் உள்ளார்.