நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்! உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும்!

நாடளாவிய ரீதியில் ஜனவரி முதல் ஏப்ரல் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில் டெங்கு நோய் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்றுநோய் பிரிவு அறிவித்துள்ளது.

மேலும், 13,505 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தொற்றுநோய் பிரிவின் செய்தியில் மேலும்,

மாவட்ட ரீதியாக டெங்கு நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். இதற்கமைவாக கொழும்பு மாவட்டத்தில் 2,998 டெங்கு நோயாளர்களும், இதற்கு அடுத்தபடியாக கம்பஹா மாவட்டத்தில் 1,703 டெங்கு நோயாளர்களும்,

இதற்கும் அடுத்தபடியாக யாழ்ப்பாணத்தில் 1,676 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

எவருக்காவது காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் என நாட்டு மக்களுக்கு வைத்திய நிபுணர்களால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.