பாதுகாப்பு செயலாளரை சந்திக்கும் சம்பந்தன்! காரணம் என்ன?

பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பாதுகாப்பு படையின் அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பானது எதிர்வரும் 29 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

வடக்கில் பொதுமக்களின் காணிகளை பாதுகாப்பு படைவசமாக்க மீண்டும் காணி அளவீடுகள் இடம்பெறுகின்ற விடயம் சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.