96 நடிகைக்கு தடைவித்த பெற்றோர்கள்.! இது தான் காரணமாம்!

காதலிப்பவர்களையும், காதலில் தோல்வி அடைந்தவர்களையும் உருகவைத்த 90 பட நடிகைக்கு பெற்றோர்கள் தடைவித்து அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளனர்.  

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பல நடிகர் நடிகைகளின் வாரிசுகள் மிக எளிதாக சினிமாவில் நுழைந்து தங்களுக்கான இடத்தை இளம் வயதிலேயே தக்கவைத்துக்கொள்கின்றனர். அந்த வகையில் பிரபல நடிகர் தம்பதிகளான சேட்டன் மற்றும் பிரியதர்ஷினியின் மகளான நியதி விஜய் சேதுபதியின் 96 படத்தில் திரிஷாவின் குழந்தை பருவ தோழியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.  

நியதி அந்த படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் முதல் படத்திலேயே அவரது நடிப்புக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்தனர்.  

இந்த படத்திற்கு பின்னர் நியதி பல்வேறு படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால், நியதி தொடர்ந்து திரைப்படத்தில் நடிக்க அப்பா சேட்டன் மற்றும் அம்மா ப்ரியதர்ஷினி தடை விதித்தாக செய்திகள் பரவியது.  ஆனால், நியதி 10ம் வகுப்பு படிப்பதால் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும் என்பதற்காக தற்போதைக்கு நடிப்பு வேண்டாம் என்று பெற்றோர்கள் கூறியுள்ளனராம். 

 

ஆக கூடிய விரைவில் நியதி தொடர்ந்து 96 போன்ற அற்புதமான படைப்புகளில் தன் நடிப்பை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.