தெலுங்கில் ரீமேக்காகும் அருண் விஜயின் தடம்

அருண் விஜய் நடித்துள்ள  தடம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் விறுவிறுப்பான திரைக்கதையும் இருப்பதால் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. 

சமீபத்தில், அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'தடம்'. ஆக்‌ஷன், த்ரில்லர் கலந்த  வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மகிழ்திருமேனி இந்த படத்தை அற்புதமாக இயக்கி இருந்தார்.

இதில் அருண் விஜய் உடன்  தன்யா கோப், யோகி பாபு, ஸ்மிருதி வெங்கட், சோனியா அகர்வால், வித்யா பிரதீப் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். 

திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.  இதன்படி  தடம் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கில் நடிகர் ராம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஸ்ரவந்தி ரவிகிஷோர், தாகூர் மது ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.