இதுவொரு புதிய துவக்கம்: தமிழுக்கு வந்த ராஷ்மிகா மந்தானா நெகிழ்ச்சி

கீதா கோவிந்தம் படம் மூலும் இன்கேம் இன்கேம் காவாலே' என ஆந்திர  ரசிகர்களை ஏக்கப்பார்வை பார்க்க வைத்தவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது தமிழில் அறிமுகம் ஆகியுள்ளார். 

ரெமோ பாக்யராஜ் கண்ணண் இயக்கும் கார்த்தியின் 19 வது படம் முலம் தமிழ் படத்தில் நடிக்கிறார். 

கன்னடத்து பைங்கிளியான ராஷ்மிகா இன்று கார்த்தி 19 படத்தின் துவக்க விழாவில் பங்கேற்றார். அந்த படங்களை டுவிட்டரில் பதிவிட்டிருந்த அவர், எனக்கு  எப்போதும்  மிகப்பெரிய ஆதரவினை  கன்னட மற்றும் தெலுங்கு ரசிகர்கள் அளித்து வருகிறார்கள். என்னை தமிழக்கு வருமாறு நீங்கள்(தமிழ் ரசிகர்கள்) அழைத்தீர்கள், அதனால் 2019ம் ஆண்டில் தமிழுக்கு வந்துவிட்டேன். கார்த்தி 19 படக்குழுவுடன் இணைந்து படம் பண்ணுவது மிகச்சிறந்த மகிழ்ச்சி. இதுவொரு புதிய துவக்கம். என்னை நேசிக்கும் அனைவருக்கும் அன்பு கலந்த நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ராஷ்மிகா மந்தானா, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாவுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.