மன்னாரில் சிக்கிய பாரிய பீடி இலைகள்!

மன்னார் - மணல் வீதி நான்கு, கடற்பகுதிக்கு அருகில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 751 கிலோ கிராம் பீடி இலை தொகையை கடற்படை மீட்டுள்ளது.

இதனுடன் குறித்த மோசடியுடன் தொடர்புடைய 4 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

பீடி இலை தொகை அடுத்தக்கட்ட விசாரணை நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்க காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.