யாழ். மாநகர சபைக்குள் அமளி !

நாடுதழுவிய ரீதியில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள ‘கம்பெரலிய’ துரித அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக, யாழ். மாநகர சபைக்குள் கடும் வாக்குவாதம் நிலவி வருவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபை அமர்வு முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இன்றுகூடியுள்ளது.

இதன்போது உள்ளூர் வட்டார வீதி அபிவிருத்தி மற்றும் ‘கம்பெரலிய’ திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சபையில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், ‘கம்பெரலிய’ திட்டம் தொடர்பாக முறையான விளக்கமற்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சபை அமர்வில் கடும் அமளி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.