மருத்துவமனையில் விக்னேஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் தொடர்பாக, சிறிலங்கா அதிபருக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் இன்று நடக்கவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், உடல்நலக்குறைவினால், யாழ்.போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.

அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாலேயே சிறிலங்கா அதிபருடனான இன்றைய சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.

வடக்கில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள், பொருத்து வீட்டுத் திட்டம், இராணுவம் வசமுள்ள காணிகளை விடுவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக, சிறிலங்கா அதிபருக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இந்தச் சந்திப்பில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொள்வதாக இருந்தது, மேலும், வடக்கின் ஐந்து மாவட்ட அரசாங்க அதிபர்களும் இந்தச் சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.