பிக்பாஸ் சென்றாயனுக்கு ஆண் குழந்தை: பிரபல இயக்குனர் வாழ்த்து

பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த சென்றாயன் தனது மனைவி கர்ப்பாமாக இருப்பதை அறிந்து துள்ளி குதித்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று அவருடைய மனைவி கயல்விழிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் முகத்தை பார்த்து சென்றாயன் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சென்றாயன் நடித்த 'மூடர் கூடம்' படத்தை இயக்கிய இயக்குனர் நவீன் தனது டுவிட்டர் பக்கத்தில் சென்றாயானுக்கு வாழ்த்து கூறியுள்ளார். 'தம்பி சென்றாயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்' என்று இயககுனர் நவீன் தனது டுவீட்டில் தெரிவித்துள்ளார்.