வடக்கு ஆளுநர் அலுவலகம் முன் பெண் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழீழ காலத்தில் நிம்மதியாக வாழ்ந்தநாங்கள், நடுச்சாமத்திலும் வெளியில போகலாம், தமிழீழ காலத்தில அந்த மாதிரித்தான் நாங்கள் வாழ்ந்துகொண்டு இருந்தநாங்கள், ஆனால் இப்போது இப்படி துன்பப்படுறம் என வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக தாய் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது குறித்த தாய் இவ்வாறு தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், எங்கட பிள்ளைகளை விடு, எங்கட ஆட்சியில விடு, தமிழீழ காலத்தில அந்த மாதிரித்தான் நாங்கள் வாழ்ந்துகொண்டு இருந்தநாங்கள்.

இப்பதான் இப்படி துன்பப்படுறம். இப்ப வந்தவையல் குப்பைகள் குப்பை ஆட்சி செய்யுதுகள், என்றெல்லாம் தமது துயரை கொட்டி போராட்டத்தின்போது கொட்டித் தீர்த்துள்ளார்கள்.