யாழ் பல்கலை 4ம் வருட காவாலி மாணவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட மாணவன்!!

யாழ் பல்கலைகழகத்தின் நான்காம் வருட மாணவர்கள் இருவர் தாக்கியதில் காயமடைந்த முதலாம்
வருட மாணவர் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பகிடிவதை விவகாரமே இந்த தாக்குதலிற்கு காரணம் என தெரிகிறது.

தன்னை தாக்கியபோது, அதை ஒளிப்பதிவு செய்துள்ளார் அந்த மாணவன்.

நேற்றும் இந்த மாணவனை, நான்காம் வருட மாணவர்கள் வீதியில் வைத்து அச்சுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், இன்று பல்கலைகழக வளாகத்திற்குள் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

பல்கலைக்கழக முதலாம் வருட மாணவன் ஒருவனை நான்காம் வருட மாணவன் நேற்று வீதியில் வைத்து அச்சுறுத்திய நிலையில், இன்று பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து அதே நான்காம் வருட மாணவர்கள் இருவர் கெல்மெட்டுக்கலால் சரமாரியாக தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளான். பெற்றோர்கள் பெரும் அவலத்தின் மத்தியில் தமது கஸ்டங்குக்கு மத்தியில் தமது வாயை,வயிற்றைக் கட்டி பிள்ளைகளை படிப்பதற்காக அனுப்பி வைத்தால், இங்கு படிக்கிற பாசாங்கில் ரவுடிகளால் வதைக்கப்படுகிறார்கள். இது பல தடவைகள் நிகழ்ந்தேறியுள்ளது, இது தொடர்பில் தாக்குதலுக்கு உள்ளாகி மாணவனால் பல்கலைக்கழகத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளான். இவ் விடயம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் நிருவாகம், மாணவர் ஒன்றியம் தங்களது காத்திரமான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்சியாக எம்மால் ஆதாரத்துடன் அவதானிக்கப்பட்டுள்ளது , ஆகவே ஆதாரத்துடன் ரவுடிகளை சட்டத்தின் முன் நாம் நிறுத்துவோம். மேலும் பாதிக்கப்பட்ட மாணவன் தொடர்ச்சியாக தாக்குதல் சம்பவத்திற்கு ஆலாக்கப்பட்டால் பல்கலைக்கழகமும் மாணவர் ஒன்றியமும் முழுப் பொறுப்பாளிகள் என்பதனை இங்கு பதிவு செய்கிறேன்.

மு.மதிவாணன் 
ஊடகவியலாளர்.