யாழ் இளைஞர்களை கலியாணம் கட்டவிடாது ஜனாதிபதி சதி!!

யாழ் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்கள் தொடர்பாக இணையத்தளங்களில் அவதுாறு செய்தி வந்ததற்காக தாதியர்கள் கொதித்து எழுந்தனர். ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பெருமளவு சீதனம் வாங்கி செய்வதற்கு கனவில் இருந்த இளம் ஆண் தாதியர்களும் வெளிநாட்டு மாப்பிளை மோகத்தில் இருந்த இளம் பெண் தாதியர்களும் இதனால் கலங்கியழுதனர்.

அத்துடன் திருமணமான பெண் தாதியர்களின் கலக்கம் இன்னொரு புறம்.
ஏனெனில் புருசன் தன்னை சந்தேகப்படுவானோ என்ற நினைவு.

‘அம்மா தாயே புருசன் இவ்வாறு வந்த செய்திக்கு சந்தேகப்பட்டால் அதற்கும் ஊடகத்திலேயோ குறை சொல்லுாவாய்… சந்தேகப்படுற புருசன் உனக்கு எதுக்கும்மா‘ எனவும்

‘பொஞ்சாதி உழைப்பில சொகுசு வாழ்கை வாழுற புருசன் இப்படி எல்லாம் சந்தேகப்படலாமா??‘ எனவும் பல காவாலிகள் தாதியர்களை கேவலமாக சமூக வலைத்தளங்களில் எழுதி வரும் வேளையில் யாழ்ப்பாணத்தில் திருமண வயதில் உள்ள இளைஞன் ஒருவன் ஜனாதிபதி யாழில் உள்ளவர்கள் குடிகாரர்கள் என்று சொன்னதற்காக இளைஞர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக சமூகவலைத்தளத்தில் எழுதியுள்ளார். அதை இங்கு தந்துள்ளோம்….

“இலங்கையில் மது விற்பனையில் யாழ். மாவட்டம் முன்னிலை “ என செய்தி எழுதியவன் மீதும் , அதனை தெரிவித்த ஜனாதிபதி மீதும் பொலிஸில் முறைப்பாடு செய்ய உத்தேசித்துள்ளேன்.

ஏனெனில் , அந்த செய்தியால் யாழில் உள்ள இளைஞர்கள் மிகுந்த மனவுளைச்லுக்கு ஆளாகியுள்ளோம். அந்த செய்தியை பார்க்கும் போது யாழில் உள்ள இளைஞர்கள் எல்லாம் போதைக்கு அடிமையானவர்கள் போல் உள்ளது. இதனால் மிகுந்த மனச்சோர்வுடன் இருக்கிறோம்.

மிக முக்கியமாக இந்த செய்தியானால் தான் யாழில் பல இளைஞர்கள் திருமணம் செய்ய முடியாதுள்ளனர். யாழ் இளைஞர்கள் என்றால் போதைக்கு அடிமையானர்வர்கள் என நினைத்து யாரும் பெண் தாறார்கள் இல்லை.

எனவே அந்த செய்தியை பிரசுரித்த BBC காரணையும் , அதனை தெரிவித்த ஜனாதிபதியையும் கைது செய்ய வேண்டும் என கோரி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளேன்.

இணைந்து போராட திருமணமாகத இளைஞர்கள் முன் வரவும்.

இத பார்க்க லூசு தனமாக இருக்கு என நினைப்பவும் , இதற்கெல்லாம் பொலிஸ் முறைப்பாடு செய்யலாமா ? , இதற்கெல்லாம் வழக்கு தொடர முடியுமா ? , ஜனாதிபதிக்கு எதிரா முறைப்பாடு செய்யலாமா ?, வழக்கு தொடரலாமா ? தவறான செய்திக்காக ஊடகவியலாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரலாமா ? என நினைப்பவன் எல்லாம் ஓரமா நின்று வேடிக்கை மட்டும் பாருங்க ...

“ போராடுவோம் போராடுவோம் BBC காரனை கைது செய்யும் வரை போராடுவோம் “