டம்மி ஆக்கப்பட்ட விஜய் சேதுபதி? ஜித்து இல்ல வெறும் வெத்து

பொங்கலை முன்னிட்டு விடுமுறை தினங்களையும் குறிவைத்து பேட்ட மற்றும் விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது. இரு படங்களும் நசிகர்கல் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக பேட்ட படம் ரஜினி ரசிகர்களை தவிர்த்து பலதரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. 

பேட்ட படம் முழுக்க முழுக்க ரஜிக்கான படமாக உள்ளதகாபலர் தங்களது கருத்துக்களை பதிவிடுகின்றனர். படத்திற்கான பிரமோஷன் முதல் போஸ்டர் ப்ரோமோ வரை அனைத்திலும் ரஜினி. ரஜினிக்கான படம் என்றால் எதற்கு இத்தனை பெரிய ஆர்ட்டிஸ்டுகள் படத்தில் என்ற கேள்வியும் கேட்க தோன்றுகிறது. 

குறிப்பாக விஜய் சேதுபதி என்னும் நடிகரை படத்தில் டம்மி ஆக்கியுள்ளனர். விஜய்சேதுபதி ரஜினிக்கு வில்லன் என்றதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. எகிறிய எதிர்ப்பார்ப்பை அப்படியை அமுக்கிவிட்டனர் பேட்ட படத்தில். 

ரஜினியின் என்ட்ரி மட்டும் அல்ல விஜய் சேதுபதியின் என்ட்ரியும் மாஸாக உள்ளது. ஆனாலும், விஜய் சேதுபதியின் கேரக்டரில் வழக்கமான பவர் இல்லை. அவருக்கு இன்னும் கொஞ்சம் வெயிட்டான கதாபாத்திரம் கொடுத்திருக்கலாம் என்பது தீவிர விஜய் சேதுபதி ரசிகர்களின் ஆதங்கம்.