இன்றுடன் வடக்கிலிருந்து வெளிறுகிறார் ஆளுனர் ரெஜினோல்ட் குரே

புதிய வருடத்தில் ஆளுனர்கள் பலர் மாற்றப்படவுள்ளனர். இதில் வடக்கு ஆளுனரும் உள்ளடங்குகிறார்.

மாகாண ஆளுனர்களை முழுமையாக மாற்றம் செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இதற்காக நாடு முழுவதுமுள்ள ஆளுனர்களிடம் பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபதி கோரியுள்ளார்.

வடக்கு ஆளுனரும் தனது பதவிவிலகல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். இன்று அவர் கொழும்பிற்கு புறப்பட்டு செல்வதாக தெரிகிறது.

இதே ஆளுனர்கள் வேறு மாகாணங்களிற்கு நியமிக்கப்படவோ, புதியவர்கள் நியமிக்கப்படவோ வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

எனினும், ரோகித போகொல்லாகமவை கிழக்கு மாகாண ஆளுனராக மீள நியமிக்கப்படக் கூடாதென தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.