இலங்கையின் முதன்மை அபிவிருத்தி திட்டம் ஜூனில் அறிவிப்பு! பிரதமர் தகவல்

இந்ததிட்டம் வெளியானதன் பின்னர் அதற்கு அமைய நாடு முழுவதும் அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் மே மாதம் ஜப்பான் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டில் பங்கேற்று நாடு திரும்பியவுடன் குறித்த முதன்மை அபிவிருத்தி திட்டம் குறித்த அறிவித்தல் வெளியிடப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கையின் பணம் பனாமாவுக்கு சென்றதா? என்பது குறித்து தற்போது தகவல்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன எனவும் பிரதமர் தெரிவித்தார்.

இதேவேளை, கடல் கொந்தளிப்பாக இருக்கலாம். ஆதனை தடுக்கமுடியாது. எனினும் படகு கவிழாமல் பயணிக்கக்கூடிய வழியை தாம் உறுதிப்படுத்தவுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.