இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் 'தி லெஜன்ட் ஆஃப் தி ஜங்கிள்'? ஏன் தெரியுமா

இந்திய எழுத்தாளர் ரூட்யார்ட் கிப்ளிங்கின் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள ஹாலிவுட் திரைப்படமான 'தி லெஜன்ட் ஆஃப் தி ஜங்கிள்' திரைப்படம் வருகின்ற டிசம்பர் 7ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. 

இந்தியாவின் மும்பையில் 1865ம் ஆண்டு பிறந்தவர் ரூட்யார்ட் கிப்ளிங். இவர் பின்னாளில் இங்கிலாந்தில் உள்ள லண்டனில் குடியேறினார்.  அங்கு பிரபல எழுத்தாளராக உருமாறிய ரூட்யார்ட், 1894ஆம் ஆண்டு  தி ஜங்கிள் புக் நாவலை எழுதி வெளியிட்டார். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பிற்காலத்தில் இக்கதையைக் கொண்டு அனிமேசன் தொடராக வெளியானது.

கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான தி ஜங்கிள் புக் திரைப்படம் வசூலில் பட்டையைக் கிளப்பியது. இந்த கதையில் மெளக்லி, பகீரா, பாலூ, சேர் கான் போன்ற முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பெற்று இருந்தன. 

இந்நிலையில் கிளிப்பிங் எழுதிய மெளக்லி நூலை வைத்து, ' தி லெஜன்ட் ஆஃப்தி ஜங்கிள்' எனும் பெயரில் 3டி திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. ஆண்டி செர்கிஸ் இயக்கியுள்ள  இத்திரைப்படத்தை ஜானதன் காவன்டிஸ், ஸ்டூவ் குளோவ்ஸ் ஆண்டி செர்கிஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்பட வெளியீட்டு உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது. இதில் ரோகன் சந்த், ம்தயு ரேஸ், பிரைா பின்டூ என பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்.. 

இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதி குறிப்பிட்ட திரையரங்குகளிலும், நெட்பிளிக்ஸிலும் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.