முச்சக்கரவண்டியில் கஞ்சா கடத்தியவர் கைது!

முச்சக்கரவண்டியில் கஞ்சா கடத்தல் நடவடிக்கையை மேற்கொண்ட சாரதி ஒருவரை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

யாழ்ப்பாணத்தில் இருந்து கற்பிட்டி நோக்கி இன்று காலை குடும்பத்துடன் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றை வவுனியா, இறம்பைக்குளம் பகுதியில் பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.

தன் போது சூட்சுமமான முறையில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த முச்சக்கர வண்டியை செலுத்தி வந்த சாரதியை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து ஒரு கிலோ 770 கிராம் கஞ்சா மீட்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதேவேளை, கடந்த ஒரு வாரத்தில் சொகுசு கார் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா கடத்தல் நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டுள்ளதுடன், 8 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.