வவுனியாவில் சட்டவிரோத மதுபானத்துடன் நபர் ஒருவர் கைது!

புளியங்குளம் பொலிஸ் பிரிவில் நேற்று 750மில்லி லீற்றர் 30 போத்தல்களில் சட்டவிரோத கசிப்புடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

புளியங்குளம் புதூர் சந்திப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவல் ஒன்றில் சென்ற பொலிசார் 750 மில்லி லீற்றர் 30 போத்தல்களில் அடைக்கப்பட்ட சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் 68 வயதுடைய நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக புளியங்குளம் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.