மறுபடியும் 10 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ்: கெத்து காட்டும் '2.0'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய '2.0' திரைப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது என்பது தெரிந்ததே. ஆனால் இதே படம் மீண்டும் 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகவுள்ளதாக வந்துள்ள செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆம், '2.0' திரைப்படம் சீனாவில் விரைவில் 10 ஆயிரம் திரையரங்க வளாகங்களில் 50 ஆயிரம் ஸ்க்ரீன்களில் அதிலும் 47 ஆயிரம் 3டி ஸ்க்ரீன்களிலும் வெளியாகவுள்ளது. இந்த தகவல் லைகா நிறுவனத்தின் டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

'2.0' திரைப்படம் ஏற்கனவே ரூ.500 கோடி வசூலை நெருங்கி வரும் நிலையில் சீனாவில் மட்டும் ரூ.500 கோடி வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் மொத்தம் ரூ.1000 கோடி மைல்கல்லை இந்த படம் தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் கோலிவுட் திரையுலகமே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.

The Next Major Milestone for Team #2Point0 ➡️ MEGA Release In CHINA.. #2Point0InChina #2Point0MegaBlockbuster