கமல்ஹாசனின் கடைசி படம் இதுதானா ...ரசிகர்கள் அதிர்ச்சி...

மக்கள் நீதி மையத்தின் தலைவரும் தமிழ் சினிமாவின் மூத்த நடிகருமான கமல் அரசியல் கட்சி தொடங்கி அதற்காக பட்டி தொட்டி எங்கும் நேரடியாக களமிறங்கி அதை பிரபலப்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் தமிழக டெல்டா பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் நீதி மையத்தின் சார்பாக 2 கோடி ரூபாய் நிவாரண உதவி செய்தார்.

மற்ற நடிகர்கள் மாதிரி நன்கொடை கொடுத்ததோடு நிற்காமல் நேரடியாக பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 பட வேலைகள் பிரமாண்டமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

2019 ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்பதால் இந்திய 2 படமே என் நடிப்பில் வெளிவரும் கடைசி படமாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப்பதிவு அரவரது ரசிகர்களுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.