பல பெண்களை காப்பாற்றவும் முடியும்: ஶ்ரீரெட்டி பரபரப்பு புகார்

தெலுங்கு திரையுலகில்  தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்திவிட்டு ஏமாற்றிவிட்டாதாக இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர் என பலர் மீது புகார் கூறியவர் ஶ்ரீரெட்டி. இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவருக்கு நடிகர் லாரன்ஸ் தனது படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கி உள்ளார்.

ஒரு தமிழ் நடிகர் மீது சமீபத்தில் ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டினார். ‘‘என்னை பொது கழிப்பிடம் போல் பயன்படுத்துகின்றனர். எனக்கு ஏற்பட்ட வலியும் காயமும் இன்னும் ஆறவில்லை. படவாய்ப்புக்காக ஒரு பிணத்தை போலவே பயன்பட்டேன். என்றார்.

இந்நிலையில் மீண்டும் பேஸ்புக் பக்கத்தில் புதிய புகாரை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

‘‘தகவல்களை வெளியிடுவதில் ‘சிரி’ எவ்வளவு பிரபலமானது என்று அனைவருக்கும் தெரியும். இந்த ஸ்ரீயும் அப்படித்தான். சினிமா துறையில் இருக்கும் பெரிய ஆட்களின் காதல் சமாசாரங்கள் எல்லாமே எனக்கு தெரியும். வித்தியாசமான பல பெண்களிடம் இருந்து அனைத்து தகவல்களையும் திரட்டிக்கொண்டு இருக்கிறேன்.  இது திரைத்துறையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பெரிய உதவியாக இருக்கும். இதன் மூலம் படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படும் சிக்கலில் இருக்கும் பல பெண்களை காப்பாற்றவும் முடியும்.’’ இவ்வாறு கூறியுள்ளார்.