மொத்தமாக சுற்றி வளைத்த விஸ்வாசம்! பேட்ட படத்துக்கு வந்த நிலைமை!

2019ம் ஆண்டு  பொங்கல் பண்டிகையின் போது தல அஜித்தின் விஸ்வாசமும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படமும் மோத உள்ளன. இரு படங்களின் ரிலீஸ் தேதியும் ஒரே நாளில் வெளியாகும் என திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். 

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் தமிழக உரிமையை பெற்ற கே.ஜே.ஆர்.ராஜேஷ்,  தமிழகம் முழுவதும் உள்ள மிக பிரபலமான 70 சதவீத திரையரங்குகளில் விஸ்வாசம் படத்தை முன்பதிவு செய்துவிட்டாராம்.

மிஞ்சம் இருக்கும் 30 சதவீத திரையரங்குகளில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தை  எப்படி திரையிடுவது என பேட்ட தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.