முல்லைத்தீவில் பல இடங்களில் சுவரொட்டிகள்!

முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் பயங்கரவாதத்திற்கு எதிரான இளையோர் என்ற அமைப்பின் பெயரில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நீண்டகால யுத்தம் நிறைவிற்கு வந்து, இப்போது தான் நாம் ஓரளவு நிம்மதியான காற்றினை சுவாசிக்கின்றோம்.

இதனை குழப்பும் விதமான செயற்பாடுகளும் இடைக்கிடை நடைபெறுகின்றன. அனைத்துவிதமான கொலைகளையும் சமூகமாக நாம் எதிர்ப்போம்.

அத்தோடு இப்படியான விசமிகளை, நாம் இனங்கண்டு தண்டனை வழங்கவேண்டும் என பயங்கரவாத்திற்கு எதிரான இளையோர் அமைப்பு தெரிவித்துள்ளது.