நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்காமல் நாம் செயற்பட வேண்டும்! மஹிந்த அதிரடிக் கருத்து

தற்போதைய அரசுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடை உத்தரவுத் தீர்ப்பை அவமதிக்காமல் நாங்கள் செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தடை உத்தரவுத் தீர்ப்பை ஆட்சேபித்து இன்று உயர்நீதிமன்றத்தில் நாங்கள் மேன்முறையீடு செய்கின்றோம்.

எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. யாரும் குழம்பிக்கொள்ளத் தேவையில்லை.

எனினும், நேற்றைய நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்காமல் நாங்கள் செயற்பட வேண்டும். எங்கள் பயணம் தொடரும். ஆட்சி அல்ல தேர்தல் ஒன்றே எங்களின் உடனடித் தேவை என குறிப்பிட்டுள்ளார்.