சிறுமியை கொடூரமாக சிதைத்தது பொலிஸ்காரனா?? யாழ் போதனா வைத்தியசாலை லீலைகள் மூடிமறைப்பு!!

கடவுளின் வழிபாட்டுத்தலத்தை விட புனிதமாகவும் பயபக்தியாகவும் பொதுமக்களால் கணிக்கப்படுவது வைத்தியசாலைகளே. இவ்வாறு பொதுமக்களால் நோக்கப்படும் வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்கள் கடவுளுக்கு சமமாக நடக்கவேண்டுமே தவிர யமனைப் போல் நடக்க கூடாது. யாழ் போதனா வைத்தியசாலை வடக்கு மக்களின் முக்கிய இதயத்துடிப்பான ஒன்றாகக் கருதப்படுகின்றது. பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய எத்தனையோ வைத்தியர்கள் அந்தக் காலம் தொடங்கி இந்தக் காலம் வரைக்கும் கடமையாற்றி வெளியேறியும் கடமையாற்றிக் கொண்டும் உள்ளார்கள்.

கடும் யுத்த நெருக்கடியாக காலத்தில் சுயநலனைக் கருத்தில் எடுக்காது மக்களுக்காக சேவை செய்து வைத்தியசாலையில் தமது உயிரை துறந்த வைத்தியர்களும் இந்த வைத்தியசாலையில் கடமையாற்றியுள்ளார்கள்.

குறித்த வைத்தியசாலை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களும்  அதே நேரத்தில் வைத்தியர்களின் பல்வேறான அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகள் தொடர்பாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன்.

இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அந்த யுத்த களத்தில் நேரடியாக கடமையாற்றிய ஒருவரான திரு.சத்தியமூர்த்தி தற்போது அங்கு பணிப்பாளராக கடமையாற்றுகின்றார். அவர் பணிப்பாளராக வந்தவுடன் வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் நடைமுறைகளில் சில மாற்றங்களை மேற்கொண்டு மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயத்தை எடுத்துக் கொண்டார்.

ஆனால் தற்போதும் அவர் சேவை மனப்பாங்குடன்தான் அங்கு கடமையாற்றுகின்றாரா?? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பணிப்பாளரை அங்கு கடமையாற்றும் ஒரு சில வைத்திய அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவரையும் தங்களைப் போல் மாற்றிவிட்டதாக சந்தேகம் எழுந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு உதாரணமாக ஓரிரு நாட்களுக்கு முன் குறித்த வைத்தியசாலையி்ல திறக்கப்பட்ட ‘பூட் சிற்றி‘யைக் குறிப்பிடலாம். வைத்தியசாலையில் எத்தனையோ குறைபாடுகள் தீாக்கப்படாது இருக்கின்றன. மகப்பேற்று சிகிச்சைக்கூடங்கள் மற்றும் மகப்பேற்று விடுதிகள் மிகக் கேவலமான நிலையில் உள்ளது. அத்துடன் பெரும் இடநெருக்கடி வைத்தியசாலையில் உள்ள போது குறித்த பூட்சிற்றி‘ அமைப்பதற்கு இடம் எவ்வாறு ஒதுக்கப்பட்டு கொடுக்கப்பட்டது என பலரும் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

குறித்த பூட்சிட்டியால் நோயாளர்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்குமா என வைத்தியசாலைப் பணிப்பாளர் கருதி செயற்பட்டாரா?? எற்கனவே அங்கு ஒரு பேக்கரியும் செயற்பட்டு வருகின்றது. இவ்வாறான வியாபார நிலையங்களில் பணிஸ், கேக் போன்ற  இனிப்புப் பண்டங்களை வாங்கி உண்பதனால் சலரோக நோயாளிகளின் தொகை அதிகரிக்கும் என்பதை சத்தியமூர்த்தி உணரமாட்டாரா?  குறித்த தனியார் வியாபார நிலையங்களை  அரச வைத்தியசாலைக்குள் எவ்வாறு சத்தியமூர்த்தி அனுமதித்தார்? அவ்வாறு அவர் அனுமதித்திருந்தால் நோயாளர்களைப் பார்வையிட வருபவர்களின் மோட்டார் வாகனங்கள் பழுதடைந்தால் திருத்துவதற்கு கராஜ் ஒன்றையும் அதற்குள் செயற்பட அவர் அனுமதிக்க வேண்டும். தேவையற்ற செயற்பாடுகளை வைத்தியசாலைக்கும் செயற்படுத்தாது நோயாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் வைத்தியர்களுக்கும் நன்மையான விடயங்களை அங்கு அவர் மேற்கொள்ள வேண்டும் என நோயாளர்களின் நலன் விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நடக்கும் பெருமளவு கேவலங்கள் மூடிமறைக்கப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. வெளி மருந்தகங்களில் விற்பனை செய்ய தடைசெய்யப்பட்ட வலி மாத்திரைகள் குறித்த வைத்தியசாலை ஊழியர்கள் சிலரால் போதை மருந்துகளாக பயன்படுத்தப்படுகின்றனவாம். அந்த மாத்திரகைள் கடும் போதையைக் கொடுப்பதாகவும் அதனை குறித்த ஊழியர்கள் மாணவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கு பெருமளவு விலைக்கு விற்பதாகவும் தெரியவருகின்றது.

அத்துடன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சட்டவிரோத கருக்கலைப்பு மற்றும் சட்டவிரோதமான முறையில் கருத்தரித்து வரும் யுவதிகள் மற்றும் சிறுமிகளை மிக ரகசியமாக வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை அளித்து  வெளியேற்றிவிடுகின்றனர். இவ்வாறான சிறுமிகள் யுவதிகளின் பெற்றோரிடம் பெருமளவு பணமும் பெற்றுவிட்டே இவர்கள் இவ்வாறான செயற்பாட்டை செய்து வருகின்றனர். அத்துடன் அவர்களின் அழகான பெண்களின் தொலைபேசி இலக்கங்களை வாங்கி வைத்து அவர்களை வேறு இடங்களுக்கு வரவழைத்து தமது லீலைகளை நடாத்தி வருவதாகவம் வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறிப்பாக சட்டவைத்திய அதிகாரி சில சம்பவங்களை மூடி மறைத்து வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்களில் உள்ள நேர்மையான சிலர் விசனம் தெரிவித்துள்ளனர். அண்மையில் 4 வயதுச் சிறுமி அவளது தாயின் கள்ளக்காதலனால் கொடுமையான முறையில் பெண்ணுறுப்பிலிருந்து இரத்தம் வரும் அளவுக்கு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டாள். அந்தச் சம்பவம் வைத்தியசாலையின் சட்டவைத்தியஅதிகாரியால் திசை திருப்பப்பட்டு நீதிமன்றத்துக்கு செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமியின் தாயுடன் சட்டவைத்திய அதிகாரி நெருங்கிய தொடர்பை தற்போது பேணி வருவதாகவும் அந்தச் சிறுமியின் தாய் அடிக்கடி சட்டவைத்திய அதிகாரியுடன் தொடர்பு கொண்டு வருவதாகவும் வைத்தியசாலைத் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த 4 வயதுச் சிறுமி கொடூரமாக வல்லுறவுக்கு உள்ளாக்கிய விடயத்தையே மூடிமறைக்குமளவுக்கு செயற்பாடுகள் சட்டவைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டிந்தால் மேலும் எவ்வளவு நடவடிக்கைகள் குறித்த அதிகாரி மூடி மறைத்திருப்பார் என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு வலுத்துள்ளது.

குறித்த 4 வயதுச் சிறுமியும் தாயாரும் தாயாரின் தாயார்( அம்மம்மா) ஆகியோர் வசாவிளானில் பொலிஸ் அதிகாரியுடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாகவும் அவ்வாறான நிலையில் குறித்த சிறுமியையும் தாயாரையும் அந்த அதிகாரியே துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாகவும் அதனால் தான் ஏதாவது சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்டால் பொஸ் அதிகாரியால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என குறித்த சட்டவைத்திய அதிகாரி பயப்படுவதாகவும் சட்டவைத்திய அதிகாரி தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. சட்ட வைத்திய அதிகாரி அந்த பெண்ணிடம் இருந்து ( சிறுமியின் தாய்) பாலியல் லஞ்சம் பெற்றுவிட்டு இவ்வாறா சாட்டுப் போக்குகளைச் சொல்வதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.

இதே நேரம் சிறுமி கொடூரமாக சிதைக்கப்பட்டதை வெளிப்படுத்தினார் என்ற சந்தேகத்தில் 21ம் வார்ட்டில் இருந்து அந்த வார்ட்டின் பொறுப்பதிகாரியான குருபரனால்  ஒரு தாதி வேறு வாட்டுக்கு மாற்றப்பட்டு விசாரணைக்கு உள்ளாகியுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுமியை சிதைத்தவன் யார் என்பதை அறிய முற்படாது தகவல்களை வெளியிட்டவர்களை அறிய முற்படும் கேவலம் மிகுந்த நடவடிக்கைகளை குறித்த வைத்தியசாலையைச் சேர்ந்தவர்கள் எடுத்து வருகின்றார்கள்.

இந்த சிறுமி தொடர்பான புகைப்படங்களை வெளியிட்ட காரணத்தால் இன்று முதல் யாழ் போதனா வைத்தியசாலையில் தொலைபேசிப் பாவனை தடைசெய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள், மற்றும் நோயாளியுடன் நேரடி தொடர்பில் இருக்கும் சகலதுறை உத்தியோகஸ்தர்களும் ஸ்மாட் வகை தொலைபேசிகளை உபயோகிப்பதை முற்றாக நிறுத்துமாறு உள்ளக நடைமுறை ஒன்றை இன்றிலிருந்து ஆரம்பித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை சகல உத்தியோகஸ்தர்களிற்கும் கடந்த மாதம் 25 ம் திகதி முதல் வழங்கப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது.

இந்நிலையில் ஊழியர்கள் மட்டத்தில் இது தொடர்பாக பல முணுமுணுப்புக்கள் மறைமுகமாக நிகழ்ந்தாலும், நோயாளிகள் மட்டத்தில் இவரது செயற்பாடு பாரிய வரவேற்பை பெற்றுள்ளது.