போரில் உயிரிழந்தவர்களுக்கு பொதுவான வணக்க நாள் அமைக்க கோரிக்கை!

எல்லாளன்- துண்டகைமுனு யுத்தத்தில் எல்லாளன் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் துட்டகைமுனு எல்லாள மன்னனை நினைவுபடுத்த போர் நடைபெற்ற இடத்தில் எல்லாள மன்னனுக்கு வழிபாட்டிடம் வைத்தானாம்.

அதேபோல் 2009ம் ஆண்டு போர் நிறைவடைந்த பகுதியில் நினைவிடம் ஒன்றை அமைக்கவும்.வடகிழக்கு மாகாணங்களில் போரினால் உயிரிழந்தவர்களுக்கு பொதுவான வணக்க நாள் ஒன்றையும், புனித பிரதேசம் ஒன்றையும் அமைக்க கோரும் தனிநபர் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி சமர்ப்பிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்றஉறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவி த்திருக்கின்றார்.

குறித்த விடயம் தொடர்பாகமேலம் அவர் குறிப்பிடுகையில், எல்லாள மன்னன் துண்டகைமுனு மன்னனுடன் யுத்தம் செய்து அதில் தோல்வியடைந்திருந்தான். இந்நிலையில் எல்லாள மன்னன் நினைவாகவும் அவனை கௌரவ படுத்தவும் துட்டகைமுனு மன்னன் ஒரு வழிபாட்டிடம் வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.

அவ்வாறு 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த இடத்தில் ஒரு அமைப்பை உருவாக்கவும் போரில் கொல்ல ப்பட்டவர்களுக்கு பொதுவான வணக்க நாள் மற்றும் புனித பிரதேசம் ஆகியவற்றை அமைக்குமாறும் எனது தனிநபர் பிரேரணையில் கோருவதற்குள்ளேன். என அவர் குறிப் பிட்டுள்ளார்.

இந்நிலையில் 2009ம் ஆண்டு யுத் தம் தொடர்பான விடயத்தில் யார் துட்டகைமுனு, யார் எல்லாளன் என ஊடகவியலா ளர்கள் எழுப்பிய கேள்விக்கு. பதிலளிக்க மறுத்த டக்ளஸ் அது தமது பிரேரணையை பாதிக்கும் எனவும் பிரேரணை நிறைவேறிய பின்னர் பதிலளிப்பதாகவும் கூறியுள்ளார்.

65 ஆயிரம் வீட்டுதிட்டம் தொடர்பாக65 ஆயிரம் வீட்டு திட்டத்தை நாங்கள் புறக்கணித்தால் இதனை ஒத்த வேறு வீட்டுத்திட் டங்கள் கிடைப்பதென்பது மிகவும் கடினம். தற்காலிக கொட்டில்களில் வாழ்ந்து கொண் டிருக்கும் மக்களுக்கு இத்தகைய வீடுகள் என்பது மாளிகைக்கு ஒப்பானவையாகும்.

இந்நிலையில் குறித்த வீட்டை எதிர்க்கும் தமிழ் தேசியகூட்டமைப்பு இதனை எதிர்ப்பதாக இருந்தால் முன்னதாகவே எதிர்த்திருக்க வேண்டும். அதை விடுத்து இணக்க அரசியல் செய்து என்ன பலன் தங்களுடைய தனிப்பட்ட பெருமைகளை பெற்றுக் கொண்டிருக்கின்றார்களே தவிர மக்களுடைய வேலைத்திட்டங்களை சரியாக செய்திருக்கவில்லை.

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக.ஆட்சிமாற்றத்தின் பின்னர் அரசியலமைப்பு மறுசீரமைப்பு ஒன்றை மேற்கொள்ள தற்போ தைய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் இந்தச் சந் தர்ப்பத்தை நாங்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்குள்ள வழி தமிழ் தரப்புக்கள் ஒரு பொது உடன்பாட்டின்கீழ் வருவதேயாகும்.

இதற்காக நாங்கள் தற்போது 8 அமைப்புக்களுடன் பேச்சுவார்த் தை நடத்தியிருக்கின்றோம். இதனை தவிரவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, மற்றும் தமிழ் ம க்கள் பேரவை போன்றவற்றுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு நாங்கள் தயாராகவும், முயற்சிகை மேற்கொண்டும் இருக்கின்றோம்.

இதனடிப்படையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நில அபகரிப்பு பிரச்சினை, காணாமல் போனவர்கள் பிரச்சினை, மற்றும் வாழ்வாதார பிரச்சினை, அரசியல் உரிமைசார் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக நாம் சிறப்பான தீர்மானங்களை எடுத்துக் கொண்டு அவற்றை அடையவும் முடியும்.

மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் குற்றச்சாட்டு தொடர்பாக.காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு ஜனாதிபதிக்கு அறிக்கை கொடுப்பதற்காகவே இந்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.

அவர்கள் அந் த நோக்கத்தில் அல்லது வரையறைகளை மீறி அரசியல்வாதிகள் போல் முறையாக ஆ ராய்ந்து அறியப்படாத விடயங்களை பத்திரிகைளுக்குஅறிக்கையாக வழங்குவது முழுமையாக பிழையான விடயமாகும்.

எங்கள் மீது முன்வை க்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை நிரூபிப்பதற்கு எங் களிடம் ஆதாரங்கள் இருக்கின்றன.

இவ்வாறே நல்லிணக்க ஆணைக்குழுவிலும் எங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால்அவை பொய்யானவை என்பதை நிருபித்தேன். என கூறினார்.