சஜித் பிரதமர்! இறங்கி வந்தார் ரணில்?

நாளை அமைதியாக வாக்கெடுப்பு நடந்து, நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற அனுமதித்தால் பிரதமர் பதவியினை விட்டுக்கொடுக்க ரணில் இறங்கிவந்துள்ளதாக தெரியவருகின்றது.

நாளைய தினம் புதிய பிரதமராக சஜித் பிறேமதாச தெரிவாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதமர் மகிந்தவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது மீண்டும் நாளை வாக்கெடுப்பு நடத்த ஜனாதிபதி மைத்திரி இன்றைய தினம் நடைபெற்ற சந்திப்பில் இணங்கியுள்ளார்.

கட்சித் தலைவர்களை இன்று மாலை அவரை சந்தித்த போது இந்த இணக்கப்பட்டுக்கு வந்துள்ளார். ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் விதித்ததாகவும், அவை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஏனைய கட்சி தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக ரணில் பிரதமர் பதவியை விட்டுக்கொடுக்க சம்மதித்துள்ளார்.மஹிந்த மற்றும் அவரது அமைச்சரவையினை கலைக்கவேண்டுமென்ற நிலைப்பாட்டுடன் ரணில் உள்ளதாக சொல்லப்படுகின்றது.

அதன் பிரகாரம் ஜக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் என்ற அடிப்படையில் சஜித் பிறேமதாசவை பிரதமராக்க ரணில் சம்மதித்துள்ளார்.

இந்த முடிவை மைத்திரியும் ஏற்றுக்கொண்டதனையடுத்தே பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாக கொழும்பு ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.