சபாநாயகர் வெளியிட்டுள்ள மற்றுமொறு விசேட அறிக்கை! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சி

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை நிறைவுடைந்துள்ளதனை தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், நாடாளுமன்ற அமர்வினை உத்தியோகபூர்வமாக கூட்டுவது தொடர்பில் விளக்கம் அளித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் எட்டாவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக ஜனாதிபதி அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவுக்கு சவால் விடுக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இலங்கை உச்ச நீதிமன்றத்தினால் கடந்த இரண்டு நாட்களாக ஆராயப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைக்கும் நோக்கி வெளியிடப்பட்ட இலக்கம் 2096/70 என்ற வர்த்தமானி அறிவித்தலை அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை இரத்து செய்வதற்கு உச்ச நீதிமன்றம் நேற்று தீர்மாதித்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கமைய, ஜனாதிபதியினால் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி காலை 10.00 மணிக்கு நாடாளுமன்றத்தை கூட்டுவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பிற்கமைய நாடாளுமன்றத்தை கூட்டுகின்றேன்.

இந்த தடை தொடர்பில் நான் நாடாளுமன்ற செயலாளர் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்ட நிலையில், இன்று காலை 8.30 மணியளவில் கட்சி தலைவர்கள் கூட்டம் நாடாளுமன்றம வளாகத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்.

அதற்கமைய ஜனாதிபதியினால் 4ஆம் திகதி அறிவிக்கப்பட்ட வர்த்தமானிக்கமைய 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடும்.

.கடந்த சில நாட்களாக காணப்பட்ட அரசியல் நிலையற்ற தன்மையை நிறைவு செய்து, தேசிய முக்கியத்துவத்தை ஆராய்ந்து அதற்கு பொருத்தமான தீர்ப்பு வழங்குவதற்கு நீதிமன்றம் மேற்கொண்ட அர்ப்பணிப்பு தொடர்பில் மகிழ்ச்சியடையும் சந்தர்ப்பம் இந்த நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ளது என சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.