உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராஜபக்ச மேல்முறையீடு

இலங்கை பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராஜபக்சே மேல்முறையீடு செய்ய உள்ளார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை விலக்கி விட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா பிரதமர் ஆக்கினார். அதை ஒட்டி ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்னும் சந்தேகத்தில் சிறிசேனா பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார்.

அந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இலங்கை உச்சநீதிமன்றம் பாராளுமன்ற உத்தரவுக்கு நவம்பர் 19 வரை இடைக்கால தடை விதித்தது. இதனால் நாளை காலை 10 மணிக்கு இலங்கை பாராளுமன்றம் கூட உள்ளது.

ரணில் விக்கிரமசிங்கே நாளைய பாராளுமன்ற கூட்டத்திலேயே பெரும்பான்மைய நிரூபிக்க தயார் என தெரிவித்துள்ளார்.

இலங்கை உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராஜபக்சே தரப்பில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.