மறைமுக கட்டணம் அறவிடும் டயலொக் நிறுவனத்தின் அதிர்ச்சித் திருவிளையாடல்!!

அண்மைக்காலமாக டயலொக் பாவனையாளர்கள் மீள் நிரப்புகின்ற பணம் எல்லாம் விரைவாக முடிந்துவிடுவதாக நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

அது ஏன் என்பது உங்களில் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

அதற்கான விளக்கத்தினைக் கேட்டு வாடிக்கையாளர் ஒருவர், வாடிக்கையாளர் சேவை நிலையத்துடன் தொடர்புகொண்டு, டயலொக் நிறுவனம் எவ்வாறு வாடிக்கையாளர்களிடம் இருந்து காசைச் சுரண்டுகின்றது? என்று சரமாரியான கேள்விக் கணைகள் மூலம் கேட்டு நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.