வடக்கில் வீடற்றவர்களாக உள்ளவர்களில் 15 ஆயிரம் பேருக்கு வீடு!! டக்ளஸ்தேவானந்தா உடனடியான நடவடிக்கை!!

வடக்கில் வீடற்றவர்களாக உள்ளவர்களில் 15 ஆயிரம் பேருக்கு உடனடியாக வீடுகள் கட்டிக் கொடுக்கும் நடவடிக்கை டக்ளஸ்தேவானந்தா தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் இன்று ஜனாதிபதி தலைமையில் நடந்த கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டக்ளஸ்தேவானந்தா அமைச்சினால் குறித்த நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார். கூட்டமைப்பினால் குழப்பியடிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் போல் அல்லாது டக்ளஸ்தேவானந்தா மிக நேர்த்தியான முறையில் வீடமைப்பு திட்ட நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பிக்கவுள்ளார். இதனைக் கருத்தில் கொண்டு வடபகுதியில் உள்ள வீடுகள் அற்றவர்கள் உடனடியாக வீட்டினைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.