குட்டி தல ஆத்விக்கின் நியூ லுக்..! வைரலாகும் புகைப்படம்

தல அஜித்தின் மகனை பற்றி அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் அஜித் தனது குழந்தைகளை கேமராவில் அதிகம் காட்டுவது இல்லை. அஜித்தின் மகன் ஆத்விக்கின் புகைப்படங்கள் இதுவரை அவ்வளவாக வெளியானது இல்லை. 

இருந்தாலும்  எப்படியோ அவர்களை பற்றிய விஷயங்கள் சமூக வலைதளங்களில் பரவிடுகிறது.

அதாவது, அஜித்தின் குடும்பம் எங்கேயாவது வெளியே செல்லும் போது ரசிகர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிடுகின்றனர்.

அப்படி தான் அண்மையில் ரசிகர்களின் பார்வையில் விழுந்திருக்கிறார் அஜித்தின் மகன் ஆத்விக். ஷாலினி மற்றும் ஆத்விக் இருக்கும் புகைப்படம் இப்போது ரெண்டிங் ஆகி வருகிறது.