சாவச்சேரி வைத்தியசாலை வைத்திய அதிகாரி யார்? ஆளுநரை மதிக்கவில்லையா கேதீஸ்வரன்!!

சாவகச்சேரி தள வைத்தியசாலைக்கு தயாளினி மகேந்திரன் என்பவர் பணிப்பாளராக மத்திய சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந் நிலையில்  சாவகச்சேரி தளவைத்தியசாலையின் பணிப்பாளர் பி.அச்சுதன், இச் செய்தி தொடர்பாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் பணிப்பாளர் கேதீஸ்வரனுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அச் செய்தி தொடர்பாக தனக்கு எந்தவித தகவலும் தெரியாது என கூறியிருந்தாராம். இதனையடுத்து வைத்தியசாலையின் பணிப்பாராக இருக்கும் அச்சுதன்,  பணிப்பாளர் நியமனம் தொடர்பாக உறுதியான செயற்பாட்டை பெற்றுக் கொள்வதற்காக வடக்கு மாகாண ஆளுநருடன் தொடர்பு கொண்டிருந்தார். இதனையடுத்து கொழும்பில் இருந்து வடக்கு மாகாண ஆளுநர் உடனடியாக ஆளுநரின் செயலாளர் இளங்கோவனைத் தொடர்பு கொண்டு அச்சுதனை தொடர்ந்து கடமையில் நீடிக்கும் வண்ணம் உத்தரவிட்டிருந்ததாகத் தெரியவருகின்றது. இதனையடுத்து இளங்கோவன் வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளரான கேதீஸ்வரனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெற்கில் தற்போது நடக்கும் அரசியல் சர்ச்சைகள் முடியுமட்டும் அச்சுதனே குறித்த வைத்தியசாலையில் பணிப்பாளராக கடமையாற்ற பணித்திருந்தார். அத்துடன் தொலைநகல் மூலம் தனது உத்தரவை அனுப்பியிருந்தார்.  இருப்பினும் ஆளுநரின் கட்டளையைக் கேளாது வடக்கு மாகாண சுகாதர அமைச்சின் பணிப்பாளர்  சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வைத்தியர் தயாளினியை பணிப்பாளாராக நியமிக்கும் கடிதத்தை வழங்கி குறித்த வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளதாகத் தெரியவருகின்றது.

இச் சம்பவத்தால் பெரும் இழுபறி நிலை சாவகச்சேரி வைத்தியசாலையில் தோன்றியுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள என பெருமளவானர்கள் அச்சுதனுக்கு ஆதரவாக கையெழுத்திட்டு ஆளுநர் உட்பட்டவர்களுக்கு அனுப்பியும் உள்ளார்கள்.

இதே வேளை வடக்கு மாகாணப்பணிப்பாளரின் இந் நடவடிக்கை ஆளுநரின் கட்டளையை உதாசீனப்படுத்துவதாக ஆளுநரின் அலுவலகம் மிகவும் கோபத்தில் உள்ளதாகவும் விரைவில் மாகாணப் பணிப்பாளருக்கு நடவடிக்கை எடுக்க ஆளுநர் முனையலாம் எனவும் தெரியவருகின்றது.

சாவகச்சேரி வைத்தியசாலை பணிப்பாளர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த வைத்தியசாலைக்கு நிகழ்வு ஒன்றுக்கு முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை அழைத்திருந்தார். அந் நிகழ்வில் வடக்கு மாகாண அதிகாரத்தரப்பை கௌரவிக்காது விட்டதே குறித்த வைத்தியசாலைப் பணிப்பாளரது மாற்றத்திற்கான நடவடிக்கைக்கு முக்கிய காரணம் என சாவகச்சேரி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.