கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் மிக பெரும் நீர்பாசன குளமான இரணைமடு குளத்தின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வருகின்றது என நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த குளத்தின் நீர்மட்டம் இன்று அதிகாலை வரை 19.8 அடியாக பதிவாகியுள்ளது.

அண்மை நாட்களாக நாட்டில் நிலவும் பருவபெயர்ச்சி மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றது.

22 அடிவரை நீர் உயர்ந்தால் இவ்வருட காலபோகத்தினை 22 ஆயிரம் ஏக்கர்களை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என விவசாயிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

தொடர்ந்தும் நீர் நிறைவதாலும், மழைவீழ்ச்சி கிடைக்கும் என்பதாலும் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படலாம் எனபதால் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் இரணைமடு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.