கிளிநொச்சி வைத்தியசாலையில் புதிய பணிப்பாளர் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்ட வைத்திய கலாநிதி தங்கராஜா காண்டீபன் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகபொறுப்பேற்றுள்ளார்.

குறித்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றுள்ளது.

இவர் நீண்ட கால இடைவெளியின் பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலையில் கடமையேற்ற நிரந்தர பணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.