கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற கேதார கௌரி விரதத்தின் இறுதி நாள்

கிளிநொச்சியில் உள்ள பல ஆலயங்களில் குறிப்பாக அம்மன் ஆலயங்களில் கேதார கௌரி விரதம்சிறப்பாக இடம்பெற்று நிறைவுற்றது.

இருபத்தொரு நாட்கள் விரதம் இருந்து இன்றைய தினம் காப்பு கட்டி குறித்த விரதம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இவ் விரதத்தை ஆண், பெண் இருபாலரும் அனுஷ்டிக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களமாக இருக்க வேண்டியும், மணமாகாத பெண்கள் நல்ல கணவனை வேண்டியும், ஆண்கள் மங்களகரமான வாழ்க்கையை வேண்டியும் இந்த விரதத்தினை அனுஷ்டிக்கின்றனர்.

மேலும், கிளிநொச்சியில் பெருமளவான பெண்கள் மற்றும் ஆண்கள் பக்தி பூர்வமாக இவ்விரதத்தினை நிறைவு செய்து இறையருளை பெற்றுள்ளனர்.