அச்சுவேலி இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட திருடர்கள்!!

அச்சுவேலிப் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இருதிருடர்களை வளலாய் இலந்தையடி வாலிபர்கள் மடக்கிப் பிடித்து அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பம் தொடர்பில் மேலும் தெரியவருதாவது,

இடைக்காடு வளலாய் பாம்விச் பகுதியில் மோட்டார்கள், ஆடுகள், கோழிகள், மேசன் வேலைக்கு பயன்படும் உபகரணங்கள் மற்றும் கடை உடைப்பு சம்பவங்கள் என பல திரு ட்டுச் சம்பவங்கள் அண்மைய நாட்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளன.

இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் சற்று பீதியில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் நீர் இறைக்கும் மோட்டருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு வரை வழிமறித்த வளலாய் இலந்தையடி வாலிபர்கள் அவர்களை தீர விசாரித்துள்ளனர்.

இதனால் கொண்டு சென்ற மோட்டர் திருடிச் செல்லப்பட்டது எனவும் திருகோணம லையில் இருந்து மேசன் வேலை செய்வதற்கு இங்கு வந்து அப்பகுதியில் தங்கியிருப் பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் இந்த இரண்டு திருடர்களையும் அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைத்துள் ளனர். அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசார ணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.