யாழில் தீபாவளி தினத்தில் பெருமளவு நகைகள் பல இடங்களிலும் பறிக்கப்பட்டது!!

தீபா­வளி வழி­பாட்­டுக்கு நேற்­றுக் காலை ஆல­யங்­க­ளுக்­குச் சென்று வீடு திரும்­பி­ய­ வர்­கள் நகை­க­ளைப் பறி­கொ­டுத்­துள்­ள­னர்.

கல்­வி­யன்­காடு, திரு­நெல்­வேலி,கொக்­கு­வில் பகு­தி­க­ளில் இந்­தச் சம்­ப­வங்­கள் நடை­பெற்­றுள்­ளன.

கல்­வி­யன்­காடு பேச்­சி­யம்­மன் ஆலய வழி­பா­டு­களை முடித்து கால் நடை­யாக வீடு திரும்­பிக் கொண்­டி­ருந்த பெண்­ணின் 13 பவுண் தாலிக் கொடியை, உந்­து­ரு­ளி­யில் வந்த இரு இளை­ஞர்­கள் அறுத்­துச் சென்­றுள்­ள­னர்.

இது தொடர்­பில் கோப்­பாய் காவல்துறை நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

திரு­நெல்­வேலி சிவல் ஆல­யத்­தில் தீபா­வளி வழி­பா­டு­களை முடித்து வீடு திரும்­பிக் கொண்­டி­ருந்த பெண்­ணி­டம் 3 பவுண் சங்­கி­லியை அறுத்­துக் கொண்டு இளை­ஞர் ஒரு­வர் தப்­பித்­துச் சென்­றுள்­ளார்.

சங்­கி­லி­யைப் பறி­கொ­டுத்­த­வர் யாழ்ப்­பா­ணம் காவல்துறை நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­துள்­ளார்.

ஆலய வழி­பாட்­டுக்­குச் செல்­வ­தற்­காக கொக்­கு­வில் பகு­தி­யில் சென்று கொண்­டி­ருந்த மூதாட்­டியை உந்­து­ரு­ளி­யில் வந்த இளை­ஞர்­கள் தள்ளி விழுத்­தி­னர்.

அவர் அணிந்­தி­ருந்த 2 பவுண் தங்­கச் சங்­கி­லியை அறுத்­துக் கொண்டு தப்­பிச் சென்­றுள்­ள­னர்.