கிளிநொச்சியில் சற்று முன் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலி!!

 கிளிநொச்சி பகுதியில் ஏ.9 வீதியில் இன்று 06.11.18 இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவியவந்துள்ளது.

இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் மழை பெய்து கொண்டிருந்த வேளை இரவு 7.00 மணியளவில் ஏ.9 வீதியில் கனரக ஊர்தி ஒன்றுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இளைஞர்கள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களும் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.